Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha vijayakumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவ்வளோ அடி விழுந்தும் தாக்கு பிடிக்கும் வனிதா.. புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

சமீபகாலமாக பல பிரச்சனைகளையும் சந்தித்து மன உறுதி உள்ள பெண்ணாக வாழ்ந்து வருபவர் வனிதா. இவரது இல்லற வாழ்க்கையை பற்றி பலரும் மூக்கை நுழைத்து பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எதையும் தாங்கும் இதயம் உள்ள பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார். இல்லற வாழ்க்கை தாண்டியும் திரைவாழ்க்கையில் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை நேரடியாகவும், சமூகவலைதளங்கள் வழியாகும் கொடுத்து வந்தனர்.

வனிதாவின் வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அவரது தைரியத்தை பற்றியும், மன உறுதியை பற்றியும் பாராட்டுவதற்கு என்று மற்றொரு பக்கம் ரசிகர் கூட்டம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஒரு மனிதனுக்கு பிரச்சனை வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் ஒரு பெண்ணாக இருந்து  அனைத்து பிரச்சனைகளையும் தாங்கி இவ்வுலகில்  வனிதா வாழ்வது பற்றி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது வனிதா 2021 ஆம் ஆண்டிற்கான சென்னையில் இருந்து மங்களூர்க்கு சென்று மூகாம்பிகை கடவுளை வழிபட்டு வந்துள்ளார். அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் வனிதாவை பாராட்டி வருகின்றனர்.

vanitha vijayakumar

vanitha vijayakumar

மேலும் ரசிகர்கள்  பியூட்டிஃபுல்மேடம் மற்றும் சூப்பர் அக்கா , யுவர் ஆல்வேஸ் குட் கீப் ராக்கிங் அக்கா என ரசிகர்கள் தனது பாசத்தை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவ்வுலகில் பெண்கள் வாழ்வதே பெரிது, ஆனால் நீங்கள் மன உறுதி உள்ள பெண்ணாக வாழ்ந்து வருகிறீர்கள் என வனிதாவிற்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

Continue Reading
To Top