fbpx
Connect with us

மூஞ்சிக்கு நேராவே வனிதாவை வறுத்தெடுத்த KPY பிரபலம்.. உச்சகட்ட கோபம்.. வைரலாகும்  வீடியோ! 

vanitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூஞ்சிக்கு நேராவே வனிதாவை வறுத்தெடுத்த KPY பிரபலம்.. உச்சகட்ட கோபம்.. வைரலாகும்  வீடியோ! 

மக்களிடையே பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி விளங்குகிறது. அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கலக்கப்போவது யாரு(KPY-9)? என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடுவராக வந்திருக்கிறார் நடிகை வனிதா. இவரது மூன்றாவது திருமணத்தில் ஏற்பட்ட பிரேக்கப்  சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் வனிதா தன்னுடைய வேலையை வழக்கம்போல்  பார்த்து வருகிறார். எனவே தற்போது KPY-9  நிகழ்ச்சியின் புரோமோ ரிலீசாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

மேலும் அதில், KPY-9  நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த வத்திக்குச்சி வனிதாவை செம்மயா கலாய்த்துவிட்டுள்ளார் காமெடியன் பாலா.

அந்த சமயத்தில், கொஞ்ச நேரம் அமைதியா இருந்த வனிதா, அதன்பின்  பாலாவை “இதுதான் உங்களோட லிமிட், வேற கண்டெண்ட் கிடைக்கலையா? இதுதான் உங்க காமெடியா?” என்று விஜய்டிவியவே அலற வைத்துள்ளார் வனிதா.

மேலும் இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் ‘பார்த்தாச்சு பார்த்தாச்சு, புதுசா டிரை பண்ணுங்க’ என்று  கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆகையால் உண்மையாவே பாலாவிடம் வனிதா கோபப்பட்டு இருக்காங்களா? இல்ல புரோமோவுக்கு அப்படி நடிச்சுசிருக்காங்களா? என்று KPY-9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் தெரியவரும்.

புரமோ வீடியோவை பார்க்க: கிளிக் செய்யவும்

 

Continue Reading
To Top