வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

வத்திகுச்சி வனிதாவை அடக்கிய 2 போட்டியாளர்கள்.. வாலை சுருட்டிய சம்பவம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தில் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார், வனிதா கேப்டனாக இருந்த இந்த ஒரு வாரம் முழுவதும் போட்டியில் சரியாக பங்கெடுக்காத போட்டியாளரை இரவில் வெளியே தூங்கவைக்கும் தண்டனையை கொடுத்து நேற்று அபினை-யை வெளியில் படுக்க வைத்தனர்.

இதை பிக்பாஸ் சொல்லாமல் கேப்டன் வனிதா தன்னுடைய பதவி அதிகாரத்தை வைத்து செயல்படுத்தினார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் போட்டியில் சரியாக பங்கெடுக்காத போட்டியாளர்களை தேர்வு செய்த பிறகும் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி இந்த வாரத்தின் சுவாரசியம் குறைந்த நபர் யார் என்பதை மீண்டும் தேர்வு செய்தனர்.

எனவே வீட்டில் இருக்கும் 12 பேரும் தாமரை, பாலாஜி, சுருதி ஆகிய 3 பேரை குறிப்பிட்டு அவர்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிவெடுத்தனர். இந்த முடிவையும் வனிதா எடுத்ததால் காண்டான தாமரை ஒவ்வொரு நாளும் ஒருத்தரை வெளியில் ஏன் பனியில் படுக்க வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அந்த சமயத்தில் வனிதா தாமரைக்கு பதில் சொல்ல முடியாமல் அடங்கிப் போய்விட, தாமரையுடன் சேர்ந்து பாலாஜியும் பிக்பாஸ் வீட்டில் சீறுகிறார். இவர்கள் இருவரின் பேச்சுக்கு செவி கொடுக்காத வத்திக்குச்சி வனிதா சமையலறையில் சமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி எதுவும் பேசாமல் இருந்து விடுகிறார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் வனிதா இவ்வளவு நாள் ஆடிய ஆட்டத்தை கடந்த வாரம் கமல் கடுமையாக கண்டித்ததால், இந்த வார தலைவர் பொறுப்பில் இருக்கும் வனிதா வாய் விடாமல், ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையையும் அமைதியுடன் கையாள்கிறார்.

ஆனால் இதெல்லாம் நடிப்பு என்று பிக்பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கிண்டலடிப்பதுடன், அடுத்தவாரம் எப்படியும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கப் போவதால் ஓட்டுக்காக இப்படியெல்லாம் விளையாடுகிறார் என்றும் வனிதாவை நெட்டிசன்கள் பங்கம் செய்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News