Tamil Cinema News | சினிமா செய்திகள்
புருஷன் போனா போகட்டும், எனக்கு இதுதான் முக்கியம்.. அட்டகாசம் பண்ணும் வனிதா
சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வனிதாவின் பஞ்சாயத்து தான் களை கட்டிக் கொண்டிருக்கிறது.
நான்காவது முறையாக காதலில் விழுந்த வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா ரேஞ்சுக்கு தன்னுடைய மூன்றாவது கணவர் பீட்டர் பாலுடன் கோவா சென்று ஹனிமூன் கொண்டாடிய வனிதா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை அங்கேயே இருவருக்கும் சண்டை வந்து பீட்டர் பாலை வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டார் வனிதா.
இந்நிலையில் மூன்றாவது கண் அவரை துரத்தி விட்டு சோகத்தில் இருப்பார் என்று பார்த்தால் தன்னுடைய யூடியூப் சேனலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேகாவை பேட்டி எடுத்து தன்னுடைய வேலையில் குறிப்பாக பணம் சம்பாதிப்பதில் கறாராக இருக்கிறாராம்.
ஏற்கனவே பீட்டர் பால் வனிதாவின் யூடியூப் சேனலை பிரபலப்படுத்துவதற்காக அவருக்கே தெரியாமல் வனிதாவிடம் மாட்டிக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

vanitha-cinemapettai
