Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-peter-paul

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது.. பீட்டர் பாலின் முகத்திரை கிழிந்தது!

மூத்த நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தற்போது மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது தான் சர்ச்சையாக மாறியுள்ளது.

அதுவும் வனிதா பீட்டர் பால் தனது முன்னாள் மனைவியை முறையாக விவாகரத்து செய்வதற்குமுன் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டது தான் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சில நாட்களாக செய்தி சேனல்கள் முதல் யூடியூப் சேனல்கள் வரை அனைத்து பக்கங்களிலும் வனிதா மற்றும் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் பற்றிய செய்திதான் பேசப்பட்டு வருகிறது.

பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகை கஸ்தூரி பிரபல யூடியூப் சேனல் நிறுவனத்திற்காக நேரடியாக அவரை பேட்டி எடுத்தார்.

பீட்டர் பால் மற்றும் வனிதா அவர்களுடைய யூடியூப் சேனலில் சமீபத்தில் ரொமான்ஸ் கலந்த காதல் கதையுடன் ஒரு வீடியோவை வெளியிட்டனர். இதை கழுவி ஊத்தாத ரசிகர்களே இல்லை. அது மட்டுமில்லாமல் அந்த வீடியோ எங்களுடைய சொந்த ஸ்டூடியோவில் எடுத்தது என வாய் விட்டார்.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அது பொய். வனிதா வீடியோ எடுத்த அந்த ஸ்டூடியோ மற்றும் ஆபீஸ் திருநெல்வேலியைச் சேர்ந்த முஸ்லிம் பாய் ஒருவர் உடையது. பீட்டர் பால் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து ஒரு படத்தின் டிஸ்கஷனில் இருந்தார்களாம்.

அந்த படத்துக்கு 2 கோடி பட்ஜெட் எனவும் அதில் 47 லட்சம் ரூபாயை திருட்டுத்தனமாக பீட்டர் பால் செலவு செய்ததால் ஆபீசை விட்டு அடித்து துரத்தி விட்டாராம் அந்த நபர்.

கஸ்தூரி நேரடியாக அந்த ஸ்டுடியோவுக்கு சென்று அங்குள்ள நபரிடம் வீடியோ எடுத்து விரைவில் வெளியிட உள்ளார். அதற்கான புரோமோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாக கொண்டிருக்கிறது.

Continue Reading
To Top