ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பிக் பாஸுக்கு ஆர்டர் போட்ட வத்திகுச்சி.. எங்காவது போய் சாவுங்க என கூறிய வனிதா!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் பெரிய பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருமே சண்டைக் கோழிகள் என்பதால் தினம் ஒரு பஞ்சாயத்து வீட்டுக்குள் நடக்கிறது.

அதில் வழக்கம் போல இன்றைய பஞ்சாயத்தை வத்திகுச்சி வனிதா ஆரம்பித்து வைத்துள்ளார். காலையில் எழுந்தவுடன் குடிக்க காபி கிடைக்கவில்லை என்று பல்லு கூட விளக்காமல் கையில் பிரஷ் உடன் வனிதா கோபமாக இருக்கிறார். அவரை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சமாதானபடுத்துகிறார்கள்.

ஆனாலும் அடங்காத வனிதா எனக்கு தலை வலிக்குது, காது வலிக்குது காபி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதனால் டாஸ்க் செய்ய முடியாமல் போட்டியாளர்கள் தவிக்கிறார்கள். நீங்கள் இப்படி நடந்து கொள்வது எல்லாரையும் பாதிக்கிறது என்று பாலாஜி கூறுகிறார்.

உடனே வனிதா எனக்கு எதை பற்றியும் கவலை கிடையாது என்று அனைவரையும் கடுமையாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஷாரிக் பிக்பாஸிடம் ஒரு காபியை அவங்களுக்கு கொடுத்து டாஸ்க் செய்ய அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சுகிறார்.

அப்படியும் காப்பி கிடைக்காததால் வனிதா வீட்டில் இருக்கும் டீதூள் டப்பாக்கள் அனைத்தையும் எடுத்து ஒளித்து வைக்கிறார். எனக்கு காபி கிடைக்காமல் யாரும் டீ குடிக்கக் கூடாது, எல்லோரும் டீ இல்லாமல் சாவட்டும் நின்று பிக்பாஸுக்கு ஆர்டர் போடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வந்த முதல் நாளிலிருந்தே அனைவரிடமும் மல்லுக்கட்டும் வனிதாவை தற்போது ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து வருகின்றனர். வாங்குன காசுக்கு நல்லா கண்டன்ட் கொடுக்குறீங்க என்றும் அவரை கிண்டல் செய்கின்றனர். இவர் குடுக்குற அலப்பறையில சண்டக்கோழியான தாமரை, அனிதா இவங்களெல்லாம் வீட்ல இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டது.

- Advertisement -spot_img

Trending News