அப்பா ! உங்க பேர காப்பாற்றி விட்டேன்.. பிக்பாஸ் அல்டிமேடில் அலப்பறை காட்டிய வனிதா

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆனது துவங்கப்பட்ட ஒரே வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் காரசாரமான விவாதங்களும் சண்டைக்காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மேலும் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ‘நீ யாருன்னு எனக்கு தெரியும்’ என்ற டாஸ்க் நடைபெறுகிறது.

இதில் பிக்பாஸ் கொடுக்கப்பட்டிருக்கும் டைட்டில்கள் யாருக்கு பொருந்துகிறதோ என்று போட்டியாளர்கள் இடம் வாக்குகள் எடுக்கப்பட் அதன் பிறகு அவர்களுக்கு அந்த போர்டை கழுத்தில் மாற்றிவிடுகின்றனர். இதில் ‘இந்த வீட்டின் நாட்டாமை’ என்ற டைட்டிலை 16 போட்டியாளர்களில் 12 போட்டியாளர்கள் வனிதாவிற்கு பரிந்துரைக்கின்றனர். அதன் காரணமாக வனிதா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் நாட்டாமை என்ற பட்டத்தை பெறுகிறார்.

இந்த பட்டத்தை வாங்கும்போது வனிதா, அவருடைய அப்பா நடித்த நாட்டாமை படம் இன்றுவரை ரசிகர்களால் போற்றப்படும் படம் என்பதால் அதை மனதில் வைத்து கொண்டு, அப்பா உங்க பேரை காப்பாற்றி விட்டேன்’ என்று கெத்து காட்டுகிறார். இருப்பினும் வனிதா மற்றும் விஜயகுமார் இருவருக்கும் அப்பா மகள் என்பதைத் தாண்டி சிறுசிறு பிரச்சினைகள் நிஜ வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வனிதா, விஜயகுமார் அவர்களை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கிண்டலடித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி ‘சர்ச்சைகள் இவருக்கு சட்டை மாதிரி’ என்ற பட்டமும் வனிதாவிற்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வீட்டின் சகுனி என்ற பட்டம் சுரேஷ் சக்கரவர்த்திக்கும், விஷ பாட்டில் என்ற டைட்டில் அனிதாவிற்கும் கொடுக்கப்பட்டது. அதைப்போன்று ‘உலக மகா நடிப்புடா சாமி’ என்ற பட்டத்தை தாமரை செல்விக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் கொடுத்திருக்கின்றனர்.

இதனைப் பெறும் போது தாமரை, ‘என்னுடைய இரண்டு பிள்ளைகள் மேல் சத்தியமாக நான் இந்த வீட்டில் நடிக்கவில்லை. இந்த வீட்டில் இருப்பவர்களை தங்கச்சி, தம்பி, அண்ணன் என்று வாயார கூப்பிடுவது என்னுடைய ஆள் மனதில் இருந்தே தவிர, பிக்பாஸ் வீட்டில் நான் நடித்ததில்லை’ என்று கண்ணீர் வடிக்கிறார்.

இதன்பிறகு சக போட்டியாளர்களும் வருத்தம் அடைந்தனர்.  இவ்வாறு கலகலப்பு கலந்த சோக காட்சிகள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  தாறுமாறாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்