திருமணம் முடிந்த அடுத்த நாளே பிரச்சனை.. வனிதாவை சோதிக்கும் கல்யாண வாழ்க்கை

வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் பிறந்தார். மூன்று வருடம் மட்டுமே நீடித்த அந்த வாழ்க்கை 2010 ஆம் ஆண்டு விவாகரத்துடன் முடிவடைந்தது.

பின்னர் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் உள்ளது. நடிகர் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர் ராபர்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் திருமணத்தில் ஆர்வம் கொண்டுள்ள வனிதா தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.

வனிதா தனது கணவரை உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவியது. இதெல்லாம் ஒருபுறமிருக்க திருமணம் முடிந்த கையோடு வனிதாவின் கணவருக்கு சோதனை ஆரம்பமாகி உள்ளது.

வனிதாவின் கணவர் பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். முறையாக அறிவிப்புகள் தெரிவித்து திருமணம் நடை பெற்ற பின்பும், எப்படி இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

இதற்கு முன்னதாகவே வழக்கு பதிவு செய்து, இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் ஆனால் எல்லாம் முடிந்த பின்பு புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றவர்களுக்கு பிரச்சனை கொடுப்பது தான் வனிதாவின் வழக்கம், ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை எப்படி சந்திக்கப் போகிறார் என்று குழம்பிப் போய் உள்ளாராம்.