Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நங்கூரம் மாதிரி நச்சுன்னு வனிதா போட்ட ட்விட்.. பீட்டருக்கு போட்ட கொக்கியில் அடுத்து சிக்க போவது யார்.?

நடிகை வனிதா விஜயகுமார் இந்த லாக் டவுன் பீரியடில், பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை சோலோவாக சமாளிச்சாங்க வனிதா.

இந்த நிலையில் வனிதா சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலை விட்டு பிரிய போவதாக தன்னுடைய யூடியூப் சேனலில் கண் கலங்கியபடி பேசியிருந்தார்.

இவ்வாறு இருக்க, தற்போது வனிதா வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று  இணையத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்கள் பலரின் மத்தியில் ‘வனிதா மீண்டும் பீட்டர் பாலுடன் சேர விரும்புகிறாரோ’ என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சில தினங்களுக்கு முன்பே பாலுடன் சேர முடிவு செய்து அவரை சந்திக்க சென்ற வனிதாவை பீட்டர் பால் துரத்தி அடித்துள்ளார். ஏனெனில் வனிதா தன்னுடைய யூடியூப் சேனலில் பீட்டர் பாலை கிழித்து தொங்க விட்டிருப்பார்.

இதனால் கோபமடைந்த பீட்டர் பால் “இப்படி எல்லாம் என்ன பத்தி தப்பா பேசிட்டு, இப்ப வந்து என்கிட்ட நிக்கிறியா?” என்று வனிதாவை விரட்டி அடித்துள்ளார்.

அதன்பிறகு வனிதா தற்போது போட்டுள்ள ட்வீட்டில், “வாழ்க்கை ரொம்பவே சிறியது. எதையும் நாம் கூட எடுத்துட்டு போகப் போறது கிடையாது. பணிவாக இருங்கள். அன்புடன் வாழுங்கள். சில நேரங்களில் கோபங்கள் தான் நம்மை மனிதர்கள் ஆக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், ‘வனிதா தற்போது செய்து வரும் செயல் நடிகை பூனம் பாண்டே செய்தது போல் உள்ளது’ என்று சில நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top