பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 20 நாட்களுக்கு கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் தனது படப்பிடிப்பு வேலையில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் அடுத்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் காரசாரமாக பல பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றவர் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸ் சீசன் 3 இல் நடந்த பிரச்சனையின் மூலம் மிகவும் பிரபலமான வனிதா அதன் பிறகு விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். சர்ச்சைக்கு பஞ்சமில்லாத வனிதா பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தேர்வானார்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதாவுக்கும் பாலாவுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வனிதா இன்று கன்பஷன் ரூமுக்கு சென்று தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
என்னை அனைவரும் கார்னர் செய்கிறார்கள் இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன் என கூறியுள்ளார். இனியும் என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது, உடனே இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன் என அழுதபடி வனிதா கூறியுள்ளார். எல்லாவற்றையும் அசால்டாக சமாளிக்கும் வனிதாவையே ஹவுஸ் மேட்ஸ் கதறவிட்டுள்ளனர்.
