கொரானாவுடன் வனிதாவை சேர்த்து வச்சு நெட்டிசன்கள் செய்த மீம்ஸ் சேட்டை.. இணையத்தில் செம வைரல்

கடந்த ஊரடங்கின் போது மொத்த தமிழ்நாட்டுக்கும் செம என்டர்டைன்மென்ட் ஆக இருந்தது வனிதா பஞ்சாயத்து தான். வனிதாவின் மூன்றாவது திருமணம், அதைக் கேட்க வந்து மூக்கை உடைத்துக் கொண்ட பல நடிகைகள் என பரபரப்பாக சென்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாக்களில் என்ட்ரி கொடுத்தார் வனிதா விஜயகுமார் அதனைத் தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டு அடுத்த மூன்றாவது வாரமே விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பல பஞ்சாயத்துகள் மீடியாக்களில் பேசப்பட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று சினிமாவிலும் தன்னுடைய அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கிவிட்டார் வனிதா.

அந்த வகையில் தற்போது அந்தகன், டுகே அழகான காதல் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் 2K அழகான காதல் என்ற படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக நடித்தது மேலும் அவருக்கு பிரச்சனையை கொடுத்துள்ளது.

ஏற்கனவே கடுப்பில் இருக்கும் வனிதாவை கோபப்படுத்தும் வகையில் நெட்டிசன்கள் செய்த சேட்டைதான் இணையதளங்களில் செம ட்ரெண்டிங். மத்திய மாநில அரசுகள் கொரானாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

vanitha-corana-meme
vanitha-corana-meme

ஆனால் நம்ம கோவை மக்களோ கொரானாவுக்கு கொரானா தேவி என சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அந்த சிலை பார்ப்பதற்கு கொஞ்சம் வனிதாவை போல் இருந்ததாக யோசித்த நெட்டிசன்கள், அதனுடன் வனிதா போட்டோவை இணைத்து இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். இதை பார்த்த வனிதா தற்போது செம டென்ஷனில் உள்ளாராம்.

vanitha-corana-meme-01
vanitha-corana-meme-01