தளபதி விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்த போது கூட இவ்வளவு பேமஸ் ஆகாத வனிதா(Vanitha Vijaykumar), பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு முழுக்க பிரபலமானவராக மாறிவிட்டார்.
இதற்காக பல தாய்மார்களிடம் திட்டு வாங்க வேண்டி இருந்தது போல. அதன் பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைட்டில் வின்னர் ஆனார்.
அதன்பிறகு யூடியூபில் வனிதா என்ற பெயரில் ஒரு சேனல் ஆரம்பித்து உணவு செய்வதைப் பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது மூன்றாவதாக ஒரு நபரை திருமணம் செய்ய ரெடியாகியுள்ளார் வனிதா. இதனைப் பற்றி அவர் கூறுகையில், தற்போது யாரும் இல்லாமல் அனாதையாக நிற்பதாகவும், தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதை அறிந்து ஒப்புக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

வருகிற வாரத்தில் திருமணம் உறுதியாகி இருக்கும் நிலையில் தான் அவருடைய மூன்றாவது கணவரான பீட்டர் என்பவரின் பெயரை கையில் பச்சை குத்திய புகைப்படம் வெளியிட்டுள்ளார். வனிதா ஏற்கனவே இரண்டு நபர்களை திருமணம் செய்தும், ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையிலும் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல்தான் நயன்தாரா தனது காதலர்களுக்காக தொடர்ந்து பச்சை குத்தி வருகிறார். இதனால் வனிதாவை நயன்தாராவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் வனிதாவின் தற்போதைய வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்கட்டும்.
