மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த பிரச்சனை.. சுஜாவிடம் மல்லுக்கட்டிய வனிதா

சண்டைக் கோழிகள் அனைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரசியங்கள் உடன் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு பல காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுகிறது.

அதில் ஒன்று தான் சுஜா வருணி மற்றும் வனிதா விஜயகுமார் இடையில் நடந்த விவாதம். கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்

டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வீட்டுக்குள் வந்த வனிதா பல பிரச்சனைகளை செய்தார். அதில் முக்கியமானது நடிகை ஷெரினை, தர்ஷன் உடன் இணைத்து தவறாக பேசியது. அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு என்றெல்லாம் பேசி நிகழ்ச்சியை பரபரப்பாக்கினார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்த நிகழ்வைப் பற்றி வனிதா, சுஜாதாவிடம் பேசிக் கொண்டிருந்தார். ஏனென்றால் அந்த சீசனின் பொழுது சுதாவின் கணவர் சிவகுமார், வனிதா குறித்து ஒரு ட்வீட் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் வனிதாவுக்கு, தர்ஷனின் மீது ஒரு கண் இருப்பதால் தான் ஷெரினிடம் இவ்வாறு பேசி பிரிக்க பார்த்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பலருக்கும் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த போஸ்டை அவர் நீக்கிவிட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அதைப் பற்றி வனிதா, சுஜாவிடம் பேசினார். தர்ஷன் எனக்கு தம்பி மாதிரி நான் எப்படி அவ்வாறு நடந்து கொள்வேன் அவனுடைய அக்கா நான் என்று கூறினார். இது பற்றி உனக்கு தெரிந்தும் நீ ஏன் அமைதியாக இருந்தாய் என்று கேட்டார்.

அதற்கு சுஜா அந்த சமயத்தில் நான் கர்ப்பமாக இருந்ததால் என்னால் எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை என்றும், நான் அவரிடம் விசாரிக்கிறேன் என்றும் கூறினார். இந்த பிரச்சனையால் வனிதா, சுஜாவின் மீதும் அவருடைய கணவரின் மீது கோபமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் சுஜா அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் மிகவும் அமைதியாக வனிதாவை சமாதானம் செய்தார்.