Connect with us
Cinemapettai

Cinemapettai

வனிதா ஒரு சாக்கடை.. மீண்டும் பழைய விஷயத்தை கிளறிய பிரபல நடிகை

vanitha-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வனிதா ஒரு சாக்கடை.. மீண்டும் பழைய விஷயத்தை கிளறிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் அறிமுகமான வாரிசு நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். எதிர்பார்த்த அளவு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் திருமணத்தில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து கொண்டவர். இருந்தாலும் தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில்கூட பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் அடுத்த ஒரு மாதத்திலேயே அவரை விரட்டியடித்து விட்டார்.

இது குறித்து இணையதளத்தில் வாதங்கள் ஏற்பட வனிதாவின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்ற போகிறோம் என லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு சென்றனர்.

நைஸாக கஸ்தூரி தப்பித்துவிட்டார். ஆனால் வனிதாவிடம் ஒரு வீடியோ பேட்டி ஒன்றில் வசமாக மாட்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த பேட்டியில் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் மரியாதை குறைவாக மட்டமாக திட்டிவிட்டார்.

அதன் பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும், இயக்குனராக மட்டுமே தொடரலாம் என முடிவு செய்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி பல செய்திகள் வெளிவந்தது. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் அனிதாவை சாக்கடை எனக்கூறி வம்புக்கு இழுத்துள்ளார்.

vanitha-lakshmi-ramakrishnan

vanitha-lakshmi-ramakrishnan

வனிதாவிடம் சட்டரீதியாக ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேட்டதற்கு, அவர் நீதிமன்றத்திற்கு பயப்படுவதில்லை. ஆகையால் அது தொடர்வதும் வேஸ்ட் என்று அதை விட்டுவிட்டேன் எனவும், ஏற்கனவே ஒருமுறை சாக்கடையில் கல்லெறிந்து விட்டேன், இனி பேசாமல் நகர்ந்து போவதுதான் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதைப் பார்த்துவிட்டு வனிதா என்ன சொல்லப் போகிறார்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top