Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு.. லட்சுமி ராமகிருஷ்ணன் குரல்வளையை நெரிக்கும் வனிதா!
கடந்த சில வாரங்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் தேவையில்லாத விஷயங்கள் நிறைய பேசப்பட்டு சமூக வலைதளங்களில் தாங்களே அசிங்கப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த மாதிரி சர்ச்சைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது வனிதாவின் மூன்றாவது திருமணம் தான். பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டு வந்தார்.
அது சம்பந்தமாக பீட்டர் பால் மனைவி வனிதாவை எதிர்ப்பதற்காக கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற ஒரு துணையுடன் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அடித்து ஓட விட்டார். அந்த பேட்டியில் வாடி, போடி என ஒருமையில் பேசி லட்சுமி ராமகிருஷ்ணனை ரொம்பவும் அசிங்க படுத்தி விட்டார்.
இதனால் பொறுமையாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் உடனடியாக தன்னை மானபங்கப்படுத்திய வனிதா மீது மானநஷ்ட வழக்கு போட்டு 1.25 கோடி தனது நஷ்டஈடு வழங்குமாறு நோட்டீஸ் விட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா உடனடியாக லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை அசிங்கமாக பேசியதற்காக அவர் தனக்கு 2.5 கோடி தரவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் தங்களது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டதாக சொல்லாமல் சொல்லி உள்ளார்கள். இனி சமூக வலைதள பேட்டிகளில் பல பட்டாசுகள் வெடிக்கும் என்பது மட்டும் உறுதி.
