Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதா சரக்கடித்த வீடியோவை வெளியிடட்டுமா என மிரட்டும் நடிகர்.. அலண்டு போன அம்மணி
பிரபல மூத்த நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் மூன்றாவதாக ஒரு நபரை திருமணம் செய்து சர்ச்சையைக் கிளப்பினார்.
அதனைத் தொடர்ந்து அவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால், அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக தெரிந்தது. உடனடியாக பீட்டர் பாலின் மனைவி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கிலிருந்து பீட்டர் பாலை காப்பாற்ற வனிதா போராடிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் சூர்யா என்பவர் தலையிட்டு வனிதாவை அசிங்க அசிங்கமாக பேசி வருகிறார்.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் யூடியூப் சேனலுக்கு சூர்யா என்ற ஒரு பேட்டி எடுத்தார். அப்போது வனிதா பற்றிய கேள்விகளுக்கு கொச்சையாக பதிலளித்துள்ளார் சூர்யா. இதனை பார்த்த வனிதா உடனடியாக நாஞ்சில் விஜயன் விபச்சாரம் பண்ணுவதாகவும், சூர்யா கஞ்சா வியாபாரி எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாஞ்சில் விஜயன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் கேரவனில் சரக்கடித்து விட்டு போன வீடியோவை வெளியி விடட்டுமா என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஏதாவது வீடியோ வெளி வருமா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு பெரிய என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறது இந்த வனிதா சமாச்சாரம்.
