fbpx
Connect with us

வாணி போஜனுக்கு வந்த வாழ்வு.. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் கொட்டும் பட வாய்ப்புகள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

vani-bhojan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாணி போஜனுக்கு வந்த வாழ்வு.. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் கொட்டும் பட வாய்ப்புகள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிப்பவர்கள் தற்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது பிரபல சீரியலில் நாயகியாக நடித்த வாணிபோஜன்(vani bhojan) சினிமாவில் கலக்கி வருகிறார்.

அசோக் செல்வன் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் காதலர் தின வெளியீடாக வெளிவர இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. இதில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் நடித்து முடித்துள்ளார்.

தற்போது லாக்கப் என்ற படத்தில் வைபவ் ஜோடியாக ஒரு படமும் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. தமிழில் இன்னும் ஒரு படங்கள் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது முன்னணி நடிகருடன் சேர வாணி போஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

அதர்வா ஜோடியாக ஒரு படம், ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஒரு படம், சூர்யாவின் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் என பிஸியாக வலம் வருகிறார் வாணி போஜன்.

தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சினிமாவே தொடர்ந்து இயங்குமா என யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆறு படங்களை கையில் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகு கூட முன்னணி நடிகையாக வலம் வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் வாணி போஜன். இதனால் பல நடிகைகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்கு 40 முதல் 50 லட்சம் வாங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top