Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. நான் திரும்பி சீரியலுக்கே போறேன் எனப் புலம்பும் வாணி போஜன்
பிரியா பவானி சங்கரை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருப்பவர் வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என பட்டப்பெயரும் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் முதல் முறையாக நடித்த ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியைப் பெற்று வாணி போஜனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்ததாக வைபவ் ஜோடியாக நடித்த லாக்கப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
வாணி போஜன் முதல்முறையாக மாயா சீரியலில் தான் அறிமுகமானார். ஆனால் தெய்வமகள் சீரியல் தான் அவருக்கு நல்ல பெயரையும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கிக் கொடுத்தது.
இந்நிலையில் வாணி போஜன், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வாணி போஜன் மேனேஜரிடம் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் வாய்ப்புக்காக அவரை படுக்கைக்கு அழைத்ததாகவும், அந்த மாதிரி விஷயங்களை மேனேஜர் போனில் பேசி கட் செய்து விடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை படுக்கை கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கதாநாயகிகள் நாகரீகமாக உடை அணிந்து நல்லவிதமாக நடந்து கொண்டாலே இந்த மாதிரி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
