Connect with us
Cinemapettai

Cinemapettai

Gv-prakash-Vanibhojan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையான வாணி போஜன், இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித் திரையில் கால் பதித்தார். பெரிய திரையில் இவர் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் வருவதில்லை.

சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையான வாணி போஜன், இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித் திரையில் கால் பதித்தார். பெரிய திரையில் இவர் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் வருவதில்லை. ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வாணி போஜன் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய வெப் தொடர் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஜிவி பிரகாஷின் படத்தை ரிஜெக்ட் செய்வதற்கான காரணத்தை கூறியுள்ளார். அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read : என்ன ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க.. பேட்டியில் கதறிய வாணி போஜன்

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஆரம்பத்தில் ஹீரோயினாக வாணி போஜன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதை அடுத்த திவ்யபாரதி அந்தப் படத்தில் நடித்திருந்தார்.

இது குறித்து வாணி போஜன் பேசுகையில், படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அந்தக் கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணமும் தோன்றியது. எனக்காக படத்தில் சில காட்சிகளை மாற்றவும் இயக்குனர் முன் வந்தார்.

Also read : படமே ஓடல, கைவசம் இத்தனை படங்களா! கேரியரை காப்பாற்ற பரத் தேர்வு செய்த பாதை

ஆனால் படத்துக்கு எது தேவையோ அதை தான் இயக்குனர் வைத்திருப்பார். ஆகையால் தான் பேச்சுலர் படத்தில் இருந்து நான் விலகி விட்டேன். அதன் பிறகு திவ்யபாரதி அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் பேச்சுலர் படத்தின் பாடல்கள் ஹிட்டாகும் போது இந்த படத்தை மிஸ் செய்து விட்டேனே என்று வருந்தியதும் உண்டு.

ஆனாலும் ஹோம்லி கதாபாத்திரங்கள் நடிக்க தான் தனக்கு விருப்பம் என்றும், அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக வாணி போஜன் அந்த பேட்டியில் கூறி உள்ளார். வாய்ப்புக்காக நடிகைகள் கவர்ச்சி காட்டி வரும் நிலையில் வாணி போஜன் தன்னுடைய கொள்கையில் தவறாமல் உள்ளார்.

Also Read : இதுவரைக்கும் முட்டாளாக இருந்துட்டேன்.. அஸ்திரத்தை கையிலெடுக்கும் வாணி போஜன்

Continue Reading
To Top