Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் கொடி கட்டி பறக்கப்போகும் வாணி போஜன்.. அதுவும் பிரபல நடிகருடனா?
தமிழ்சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிப்பவர்கள் தற்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது பிரபல சீரியலில் நாயகியாக நடித்த வாணிபோஜன் சினிமாவில் கலக்கி வருகிறார்.
அசோக் செல்வன் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் காதலர் தின வெளியீடாக வெளிவர இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. இதில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் நடித்து முடித்துள்ளார்.
தற்போது லாக்கப் என்ற படத்தில் வைபவ் ஜோடியாக ஒரு படமும் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. தமிழில் இன்னும் ஒரு படங்கள் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது முன்னணி நடிகருடன் சேர வாணி போஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அதர்வா ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் புதுமுக இயக்குனரை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். மார்ச் கடைசி வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்க உள்ளது.
அடி தூள் மா!
