Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொக்கவைக்கும் கவர்ச்சியில் வாணி போஜன்.. வைரலாகும் போட்டோவால் ஸ்தம்பித்த இணையதளம்!
சின்னத்திரை நயன்தாரா என்ற கௌரவத்துடன் சின்னத்திரையில் மின்னிக்கொண்டு இருந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ‘மீக்கு மாத்ரமே செப்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது வாணி போஜன் அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வாணி போஜன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
அதாவது வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வாணிபோஜன் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘குடும்ப குத்துவிளக்காக இருந்த நீ.. இப்போ இப்படி மாறிட்டியேமா!’ என்று தங்களது கமெண்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ,வாணிபோஜன் அழகில் சொக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

vani-bhojan-1
