வஞ்சகர் உலகம்

காதல் திரில்லர் பட வகையறாவில் உருவாக்கி வரும் படம் . அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா இப்படத்தை இயக்குகிறார். இவர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் . இப்படத்தின் கதையை எழுதியது விநாயக், இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

கேங்ஸ்டர் வேடத்தில் குரு சோமசுந்தரம், புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளார்கள். விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி புகழ் சாம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.