Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏப்ரல் 22-ல் ‘வனமகன்’ இசை வெளியீடு
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘வனமகன்’ திரைப்படத்தின் இசை வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, சாயீஷா சாய்கால் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘வனமகன்’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ள இப்படத்தின் இசை வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் காதுகளுக்கு இசை விருந்து படைக்கும் என படக்குழு உறுதியளித்துள்ளது. ‘வனமகன்’ பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வனத்தில் வாழும் மனிதர் நகரப் பகுதிக்கு வந்து காதல் கொள்வது போன்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் பிரபல ஹாலிவுட் படமான ‘டார்சன்’ திரைப்படத்தை போன்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
