Tamil Cinema News | சினிமா செய்திகள்
துவங்கியது மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’. படத்தின் நடிகர்கள், இசையமைப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா ? ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே.
மணிரத்தினம் அவர்களின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்த படி தான் உள்ளது. ஒரு புறம் “பொன்னியின் செல்வன்” படமாக்க முயற்சிக்கிறார் என்பதும்; மறுபுறம் “வானம் கொட்டட்டும்” தான் அடுத்த ப்ரொஜெக்ட் என்றனர் . இதில் முதல் படம் இன்னமும் பேச்சு வார்த்தை நிலையில் தான் உள்ளது. ஆனால் இரண்டாவது ப்ரொஜெக்ட் ஷூட்டிங் ஆரம்பம் ஆகிவிட்டது.
As the skies roar, we begin #VaanamKottattum! ?
Starring @iamVikramPrabhu @aishu_dil @MadonnaSebast14 @realsarathkumar @realradikaa @imKBRshanthnu & @amitashpradhan directed by #Dhana and co-written by #ManiRatnam!
On floors from today…@LycaProductions @sidsriram— Madras Talkies (@MadrasTalkies_) July 19, 2019
வானம் கொட்டட்டும் படத்தை இணைந்து எழுதி தனது மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக தயாரிக்கிறார் மணிரத்தினம். மேலும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். மணியின் முன்னாள் அசிஸ்டன்ட் மற்றும் ’படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தின் இயக்குனர். தன குருநாதருடன் இணைந்து இப்படத்தின் கதையா எழுதியுள்ளார். இதுவரை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்
#VaanamKottattum begins today.
Happy and proud to be associated with #ManiRatnam sir’s @MadrasTalkies_ . Excited for @sidsriram music & to work with the entire cast and crew of the film? Director #Dhana ?? https://t.co/1BFQK9pRSo— Vikram Prabhu (@iamVikramPrabhu) July 19, 2019
விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
#VaanamKottattum – Day 1 ?#ManiRatnam #Dhana #MadrasTalkies @LycaProductions @iamVikramPrabhu @aishu_dil @MadonnaSebast14 @realsarathkumar @realradikaa @imKBRshanthnu @amitashpradhan @sidsriram pic.twitter.com/B4PplID0Q7
— Madras Talkies (@MadrasTalkies_) July 19, 2019
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் துவங்கியது, 2020 ரிலீஸ் ஆகுமாம் இப்படம் .
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
