Connect with us

Cinemapettai

ஜிவி பிரகாஷ், ராஜேஷ் கூட்டணியில் வந்த வணக்கம்டா மாப்ள ட்ரைலர்.. சூர மொக்கை என்பது இதுதான்!

vanakkamda-mapla

Videos | வீடியோக்கள்

ஜிவி பிரகாஷ், ராஜேஷ் கூட்டணியில் வந்த வணக்கம்டா மாப்ள ட்ரைலர்.. சூர மொக்கை என்பது இதுதான்!

ஒரு காலத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தரமான என்டர்டெய்ன்மெண்ட் படங்களை கொடுத்த ராஜேஷ் சமீபகாலமாக அநியாயத்திற்கு மொக்கை படங்களை எடுத்து வருகிறார்.

படத்தைப் பற்றிய தவறான விமர்சனம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. ராஜேஷின் பழைய படங்களை பார்க்கும்போது இவரா இப்படி எல்லாம் படம் எடுக்கிறார் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது அவரது சமீபத்திய படங்கள்.

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலிருந்து தொடங்கியது அவரது தோல்வி வரிசை. ஆல் இன் ஆல் அழகுராஜா படம் கூட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இல்லை என்றால் படம் சூப்பராக இருந்திருக்கும். அதன் பிறகு வெளிவந்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் கூட ஓரளவுக்கு ரசிகர்களுக்கு பிடித்த படம் தான்.

ஆனால் ஜிவி பிரகாஷ் மற்றும் ராஜேஷ் கூட்டணியில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு என்ற படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தை பற்றி பேச வேண்டியதில்லை. சரி எப்படியாவது தோல்விகளை சரி கட்டி விடுவார் என்று பார்த்தால் மீண்டும் தன்னுடைய பழைய தோல்விப் படங்களில் செய்த அதே தவறை மீண்டும் வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் செய்துள்ளார்.

ட்ரைலரை பார்க்கும் போது இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது போல் இருக்கிறது. ட்ரைலரில் வரும் ஒரு காமெடி வசனத்திற்கு கூட சிரிப்பு வரவில்லை, சளிப்பு தான் வருகிறது. நல்லவேளை இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உஷாராக நேரடியாக சன் டிவியில் வெளியிடுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை வெறும் வசனம் எழுதியதன் மூலமே மாஸ் ஹிட் அடிக்க வைத்த ராஜேஷ், இன்னும் எத்தனை காலத்துக்கு அரைத்த மாவையே அரைப்பார் என்பதுதான் தெரியவில்லை. வந்ததுதான் வந்தீங்க, அப்படியே வணக்கம் டா மாப்ள படத்தின் டிரைலரை பார்த்துட்டு போங்க.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top