வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிரபல படத்தை அட்டை காப்பி அடிக்கும் வம்சி.. வாரிசுக்கு வந்த சோதனை

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு  தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் விஜய் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு குடும்ப கதையில் நடிப்பதால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் பிரெஞ்சு மொழியில் வெளியான லார்கோ வின்ச் பட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கதைப்படி அந்தப் படத்தில் பிரபல தொழிலதிபர் எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவருக்கு ஒரு ரகசிய வாரிசு இருக்கிறது.

சில காரணங்களால் அந்த வாரிசு யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு குடும்பத்தில் வளர்க்கப்படுகிறார். அதை தெரிந்து கொண்ட வில்லன் அந்த வாரிசை கண்டுபிடித்து எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

இந்த கதை கருவை மையப்படுத்தி தான் தற்போது வாரிசு திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் வம்சி அந்த பட கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்து குடும்ப செண்டிமெண்ட், காதல் என்று அனைத்தும் கலந்த கலவையாக உருவாக்கி வருகிறாராம்.

தற்போது வம்சி பிரெஞ்சு படத்தின் கதையை அட்ட காப்பி அடித்து வாரிசு திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த செய்தி சோசியல் மீடியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து பட குழுவினர் எந்தவித விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தற்போது விறுவிறுப்பாக படமாகி கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News