வம்பு நடிகரிடம் கதை சொல்லி அது ஓகே ஆகி படம் எடுத்து வெளியிடுவதற்குள் கேரளாவுக்கு அடிமாடாகக் கூட போய்விடலாம். இருந்தாலும் கூட சிம்புவுக்கு கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி சமீபத்தில் போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது. கதை சொல்லி முடித்ததும் ஒரு முக்கியமான கேரக்டரைச் சுட்டிக் காட்டி, ‘இதை ஃபீமேல் லீடா மாத்திடுங்க… அந்த கேரக்டருக்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிற ஜோவான நடிகைதான் மேட்ச் ஆவாங்க.

அதிகம் படித்தவை:  'தள்ளி போகாதே' பாடலில் நடிக்க சிம்பு வைத்த நிபந்தனை

அவங்ககிட்ட சொல்லி ஓகே வாங்கிடுங்க… நானே பண்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட இயக்குநர் அப்புறம் அந்த பக்கம் போகவே இல்லையாம்…!