Connect with us
Cinemapettai

Cinemapettai

valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை பட வில்லனுக்கு என்னாச்சு? என்னை மன்னிச்சிடுங்க என மனம் நொந்து அவர் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நடித்து வருபவர் தான் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

முதல் படமே சூப்பர்ஹிட் என்பதால் அடுத்தடுத்த படங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கார்த்திகேயா நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

இடையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வரவேற்பை பெற்றார். கார்த்திகேயா நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அவரது படங்களுக்கு கிடைக்கவில்லை என்பதே சோகமாக உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக தல அஜித்தின் வலிமை படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் வலிமை படத்தில் வில்லன் வேடம் என்பதால் ஹீரோவாக ஒரு படத்தில் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக தன்னுடைய ரசிகர்களிடம் ஆர் எக்ஸ் 100 படத்திற்கு வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் அடுத்தடுத்த படங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் தன்னுடைய படங்கள் எதுவும் உங்களை வரவில்லை என்பதை உணர்ந்து விட்டதாகவும், இனி வரும் படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் எனவும் மிகவும் மனம் நொந்துபோய் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயா.

ஆர் எக்ஸ் 100 என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அவர் மீது ஒரு அழுத்தம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதுவே அவரது அடுத்தடுத்த படங்களின் தோல்விக்கு காரணம் எனவும் தெலுங்கு பத்திரிகைகள் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருக்கின்றனர்.

valimai-villain-karthikeya

valimai-villain-karthikeya

Continue Reading
To Top