Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்தை இதனால் தான் எல்லாருக்கும் பிடிக்கிறது.. புகழ்ந்து தள்ளிய வலிமை வில்லன்!
தல அஜித்தை பற்றி விஜய் ரசிகர்களைத் தவிர மற்றவர்கள் யாரிடம் கேட்டாலும் அவரை பற்றி நல்ல விதமாக தான் கூறுவார்கள்.
விஜய் ரசிகர்களும் படத்தின் வசூல் போன்றவற்றில் சண்டை போடுவார்களே தவிர அவர்களது நடிகர்களின் கேரக்டர்கள் பற்றி சண்டை போட்டது கிடையாது. அப்படிப் பார்க்கையில் விஜய் ரசிகர்களும் அஜித்தை பெருமையாகத் தான் சொல்வார்கள்.
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்ற தகவல் தற்போது வரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தல அஜித்தின் 22 வருட சினிமா வாழ்க்கையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர். அதற்கு காமன் டிபி, மாஷ் அப் வீடியோ, பிரபலங்களின் பேட்டி என களைகட்டியது.
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரும் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் நாயகன் கார்த்திகேயா தல அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கை பற்றி புகழ்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவில் பல இன்னல்களை சந்தித்து தற்போது தல அஜித் ஆக உயர்ந்து நிற்கிறார். உங்களுடைய முயற்சி அனைத்துமே எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார்.

karthikeya-actor-tweet
