fbpx
Connect with us

ஒரு வருடம் கழித்து வாயை திறந்த வலிமை படக்குழு.. அடுத்த அப்டேட் இதுதான் என்ற பிரபலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு வருடம் கழித்து வாயை திறந்த வலிமை படக்குழு.. அடுத்த அப்டேட் இதுதான் என்ற பிரபலம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருப்பவர் தல அஜித். தமிழ் சினிமாவில் இவர் சந்திக்காத சோதனைகளே கிடையாது.

அப்படியிருந்தும் தட்டுத்தடுமாறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஒரே வருடத்தில் இரண்டு நூறு கோடி படங்களை கொடுத்து மிரட்டியுள்ளார் தல அஜித்.

அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் பாதி படப்பிடிப்புகளுக்கு மேல் இன்னும் படமாக படாத நிலையில் அனேகமாக 2021 தீபாவளிக்கு தான் வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே வலிமை படம் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடாமல் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தல அஜித் ரசிகர்களிடம் அடிக்கடி அர்ச்சனை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், சமீபத்தில் வலிமை படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவிடம் வலிமை படம் அப்டேட் எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு விரைவில் வெளிவரும் என பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கூறுவதை பார்க்கும் நிலையில் அடுத்ததாக விஸ்வாசம் படத்தை போல, வலிமை படத்தின் பீஜியம் உடன் மோஷன் போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

விரைவில் அஜீத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என சொல்லாமல் சொல்லியுள்ளார் யுவன்.

Continue Reading
To Top