Connect with us

Cinemapettai

புதிய லுக்கில் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்த தல அஜித்.. வலிமை லேட்டஸ்ட் அப்டேட்

ajith-kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய லுக்கில் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்த தல அஜித்.. வலிமை லேட்டஸ்ட் அப்டேட்

தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் அஜித்குமார் இல்லாத காட்சிகளை படம்பிடிக்க உள்ளதாகவும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தல அஜித் தனது நேரத்தை வீணடிக்காமல் வீட்டின் பின்புறத்தில் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி அதை பராமரித்து வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் காஞ்சிபுரம் போலீஸ் அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

ஏற்கனவே தல அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதலில் கரை கண்டவர்.

இதனால் போலீஸ் அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படத்தைப் பார்க்கும்போது வலிமை படத்திற்கான ஒரு சில அனுபவங்களை சேகரித்து நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.

தல அஜித்தை தனி விமானத்தில் அழைத்து சென்று டெல்லியில் படப்பிடிப்பு நடத்துவதாக வதந்திகள் கிளம்பின. ஆனால் அஜித் எப்போதுமே எளிமையான வாழ்க்கையை விரும்புபவர், அதனால் இதுபோன்ற படப்பிடிப்புகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லையாம்.

ajith-kumar-1

ajith-kumar-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top