சாமியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்.. இணையதளத்தில் வைரலாகும் தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் தூங்கவிடாமல் செய்யும் ஒற்றை வார்த்தை வலிமை அப்டேட். சிங்கிள் அப்டேட்டுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தவமாய் தவமிருந்து வருகின்றனர். தற்சமயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வலிமை.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் கூட்டணி சேர்ந்துள்ள படம் தான் வலிமை. எப்போதோ படப்பிடிப்பு முடிந்து வலிமை படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக படம் தள்ளி போனது. இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி முதல் கிரிக்கெட் வீரர்கள் மொயின் அலி, அஸ்வின் வரை அப்டேட் கேட்காத ஆட்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில்தான், வலிமைப் படம் தொடர்பாக அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்தார். கிளப் ஹவுஸ் டாக்கில் பேசிய யுவன் படத்தில் அம்மா சென்டிமெண்ட் தொடர்பான பாடல் இடம் பெற்றிருப்பதாக கூறியிருந்தார். மேலும், விரைவில் வலிமை திரைப்படத்தின் மோஷன்போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

valimai-fanmade-posters
valimai-fanmade-posters

இந்நிலையில், சாமி ஆடும் நபர் ஒவரிடம் சிலர், ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கேட்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் போனி ஜி கொஞ்சம் கூட மனசு இறங்க மாட்டாரா… அந்த சாமியை வந்து சொன்னாதான் அப்டேட் தருவாரா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்