Connect with us

Cinemapettai

வலிமையில் தனது ரோல், ஷூட்டிங்கில் அஜித் சமைத்தது என்ன என்பதனை பகிர்ந்த பிரபலம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமையில் தனது ரோல், ஷூட்டிங்கில் அஜித் சமைத்தது என்ன என்பதனை பகிர்ந்த பிரபலம்!

வலிமை படத்தின் அப்டேட் வந்துவிடாதா என அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஏங்கும் அளவுக்கு தான் நிலைமை உள்ளது. கொரானா தொற்று காரணமாக படத்தின் ரிலீசும் தள்ளி போய்விட்டது, எந்த வித அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து பலரது கவனத்தை பெற்ற ஜானகி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

valimai photo

வலிமை படத்தில் அஜித்தின்  அண்ணியாக இவர் நடித்துள்ளாராம். அம்மாவாக சுமித்ரா நடித்துள்ளார். அந்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பது ஜானகி. மேலும் வலிமை படத்திற்காக டப்பிங் பேசிய நேரத்தில் இவர் பார்த்த குடும்ப காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது என சொல்லியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் ஐதராபாத்தில் மிகவும் குளிராக இருந்ததாம் , எனவே இரவு நேர படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் நடுங்கிய சூழலில் நடிகர் அஜித், அந்த சமயத்திலும் தனது கேரவனிலேயே அனைவருக்கும் சூடாக சிக்கன் சூப் தயாரித்து கொடுத்தாராம்.

படப்பிடிப்பிற்கு ஜானகி தனது குழந்தையையும் அழைத்துச் சென்றாராம் அஜித், ரொம்ப ஃபிரெண்டிலியாக பெயரை சொல்லி தான் கூப்பிட்டாராம்.

janakai suresh

இதற்கு மேல் வலிமை படம் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. மற்றவற்றை வலிமை ரிலீசின் போது தெரிந்து கொள்ளுங்கள். நானும் அனைவரை போல வலிமை எப்போது ரிலீசாகும் என்று தான் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top