Connect with us

Cinemapettai

அஜித்தின் வலிமை படக்குழுவுக்கு அடுத்த பின்னடைவு- வருத்தத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை படக்குழுவுக்கு அடுத்த பின்னடைவு- வருத்தத்தில் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித் மீண்டும் வினோத் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக படமாக உருவாகி வருகிறது இப் படம் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

போலீசாக தல அஜித். ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, படத்தில் மூன்று வில்லன்கள் என சில பல தகவல்கள் கசிந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். எனினும் அதிகாரபூர்வ போஸ்டர், BGM என எதுவும் வெளியாகாதது அனைவருக்கும் சற்றே கடுப்பு தான்.

கொரோனா வைரஸ் பிரச்சனை வலிமை படக்குழுவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி தான் உள்ளது. ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது, பின்னர் ஸ்டாப் ஆனது. சில நாட்களுக்கு முன் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இம்முறை சென்னையில் நடந்தது. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

valimai-villian

valimai-villian

அஜித் தற்போதைக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என திட்டம் போட்டாராம் வினோத். எனினும் ரேஸ் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டது விட்டது. எனவே தயாரிப்பாளரிடம் பேச, அவரும் இந்தியாவிலேயே ரேஸ் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார். டெல்லியில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத ஒரு இடத்தில் வலிமை ஷூட்டிங்கை நடத்த தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டார். ஆனால் அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்த அரசு டெல்லி அனுமதி அளிக்கவில்லை.

எனவே படக்குழுவுக்கு அடுத்த பின்னடைவாக இது மாறியுள்ளது. மாற்று லொகேஷன் தேடும் பணிகளை முடக்கி விட்டுள்ளார்களாம் இயக்குனரும், தயாரிப்பாளரும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top