இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் வலிமை படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என்று எங்கு சென்றாலும் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால், தற்போது வலிமை படம் குறித்து ஏதாவது செய்திகள் வந்தால் எவன் என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியலையே என்று ஒரு திகிலோடுதான் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த சமயத்தில் வலிமை படம் குறித்து யாராவது பேசி இருந்தால் அதுவும் பாசிட்டிவாக பேசி இருந்தால் அதை மிக அதிக வேகமாக அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் படம் என்னதான் சரியாக இல்லாமல் இருந்து விட்டாலும் ஒருபுறம் படத்திற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி இந்த படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை சம்பாதித்துத்தோடு மட்டுமல்லாமல், சில வியக்கத்தக்க செயல்களையும் செய்திருக்கிறது. ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும், விடுமுறை நாட்களிலும், மற்ற வார நாட்களிலும் திரையரங்குகளுக்கு செல்லும் மக்களின் கூட்டம் குறையவில்லை.
அதை நிரூபிக்கும் விதமாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் வலிமைக்கு ரெஸ்பான்ஸ் இல்லை என்று யார் சொன்னது வலிமைக்கு வலிமையான ரெஸ்பான்ஸ் இருக்கு. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 வருடத்தில் இந்த வலிமை திரைப்படம் மட்டும்தான் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
அது மட்டுமின்றி எல்லா பக்கமும் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் ஒரு படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்பை போல இவர்களும் கட்டாயம் இழப்பை சந்திக்க நேரிடும். அப்படியிருக்கையில் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய இந்தக் கருத்து அதற்கு நேர் எதிராக மாறி இருக்கிறது.
ஒருவேளை படத்தின் ரிவ்யூ இவ்வளவு மோசமாக வந்து இருக்கிறது அதனால் நாம் தான் முட்டுக் கொடுக்க வேண்டும் என்று இவர் களமிறங்கி திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்க இதுபோன்று வலிமை படத்திற்கு புரமோஷன் செய்து வருகிறாரா என்றும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தியாக இந்த தகவல் அமைந்திருக்கிறது. காணும் இடமெல்லாம் வலிமை படத்தை கிண்டல் செய்தும் அந்தப் படத்தைப் பற்றியே நெகட்டிவான விமர்சனங்களை பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற பாசிட்டிவ் விமர்சனங்களை அஜித் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து, தற்போது இந்த தகவலை தீயாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் சரியாக போகவில்லை என்றால் அஜித் ஆக இருந்தாலும் சரி, விஜய் ஆக இருந்தாலும் சரி நிலைமை இதுதான் என்பதை இந்த காலக்கட்டம் சினிமா வட்டாரத்திற்கு நிரூபித்திருக்கிறது.