முடிந்தது வலிமை சூட்டிங்.. கையோடு கசிந்த ரிலீஸ் அப்டேட்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது.

முன்னதாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கிட்டத்தட்ட படம் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்வித்தது. ஆனால் மற்ற ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக்கும் ஏற்கனவே அவர் பணியாற்றிய படத்திலிருந்து உருவப்பட்டது தான் என்ற செய்தி அஜித் ரசிகர்களை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியது.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே சின்ன சின்ன விமர்சனங்கள் வந்துள்ளது படக்குழுவினரை கொஞ்சம் அப்செட்டில் வைத்துள்ளது. இருந்தாலும் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டார்களாம்.

நவம்பர் தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் அந்த படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழித்து வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இருந்தாலும் காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

valimai-cinemapettai
valimai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்