விஜய்க்கு இருக்கும் தைரியம் அஜித்துக்கு இல்லையாமே.. வலிமை ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் கூட வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் நாங்க வேற மாதிரி பாடல் வெளியாகி தல ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் நடக்கும் இறுதிகட்ட படப்பிடிப்புகளுக்காக அஜித் சென்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இப்போதைக்கு வலிமை படத்தில் ரஷ்யாவில் எடுக்கப்படும் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டும் சேர்த்துவிட்டால் போதுமாம். மற்றபடி அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரெடியாக இருக்கிறது.

மேலும் வருகின்ற ஆயுதபூஜைக்கு வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை வைத்து கொள்ளலாம் என போனிகபூர் தரப்பு முதலில் முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது தியேட்டர்களில் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் வலிமை வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என பின்வாங்கி விட்டார்களாம்.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் அந்தப் படத்துடன் மோத வாய்ப்பில்லை. அதற்கு காரணம் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூலில் பாதிப்பு வரும் என்பதுதான். ஆனால் விஜய்க்கு இருக்கும் தைரியம் அஜித்துக்கு இல்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

விஜய்யின் மாஸ்டர் படம் கூட வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் வெளிவந்து மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. அப்படி அஜித் படம் செய்தால்தானே விஜய்க்கு சரியான போட்டி அஜித் தான் என்பதை நிரூபிக்க முடியும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

valimai-ajith-cinemapettai
valimai-ajith-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்