தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை பற்றிய செய்திகள் நாளுக்குநாள் இணையதளங்களில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. செய்திகளை விட வதந்திகள் தான் அதிகம் காணப்படுகிறது.
2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் ஒரே வருடத்தில் வெளியானது. ஆனால் அதன்பிறகு இரண்டு வருடங்களாகியும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வரை முடிக்கப்படவில்லை.
இறுதி கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமையில் மாட்டி சிக்கித் தவிக்கிறது. ஆனால் தற்போது வரை வெளிநாட்டு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வலிமை படத்தை முதலில் மே மாதம் கொண்டுவர முடிவெடுத்த படக்குழுவினர் அதனை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றிவிட்டனர். இனி ஆகஸ்ட் மாதத்திலும் இதே நிலை தொடர்ந்தால் குறித்த தேதியில் படம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
இதற்கிடையில் ரசிகர் ஒருவர் வலிமை படத்தைப்பற்றி அமேசான் நிறுவனத்திடம் கேட்க, தலைப்பு தொடர்பான உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது குறித்து நாங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் புதுப்பிப்புகளுக்கு தயவுசெய்து எங்கள் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள் என பதில் கொடுத்தனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் வலிமை நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகப் போகிறது என்ற பதிவை பகிர்ந்து வந்தனர். ஆனால் ஓடிடி படங்கள் பற்றிய செய்திகளை துல்லியமாக தெரிவிக்கும் இன்னொரு நிறுவனம், வலிமை படம் தியேட்டர் ரிலீஸ் தான் என்பதையும் குறித்து பதிவிட்டனர். இதனால் ட்விட்டர் பக்கத்தில் கொஞ்சம் சலசலப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.