Connect with us

Cinemapettai

வலிமை தீம் மியூசிக் பற்றி யுவன்.. தல பிறந்த நாளுக்கு கிடைத்த செய்தியை ட்ரென்ட் செய்த அஜித் ரசிகர்கள்

ajith-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை தீம் மியூசிக் பற்றி யுவன்.. தல பிறந்த நாளுக்கு கிடைத்த செய்தியை ட்ரென்ட் செய்த அஜித் ரசிகர்கள்

வலிமை படத்தின் ஒரு அப்டேட் ஆவது வந்து விடாதா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் வலிமை படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது தாங்களாகவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினருக்கு சவால் விட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க யுவன் சங்கர் ராஜா தீவிர ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உள்ளார். தயவுசெய்து ஒரே ஒரு பதில் கொடுங்கள் என்று யுவன்சங்கர் ராஜாவிடம் கேட்க அதற்கு அவர் வலிமை படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், 100% கேரண்டீ கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக மங்காத்தா, பில்லா போன்ற படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தின் இசை அமையும் என்ற எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளனர்.

மேலும் கூடுதலாக ஒரு செய்தி. வலிமை படத்தின் ஒரு பாடலுக்கு சித் ஸ்ரீராம் பாட உள்ளதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பாடலும் வேற லெவலில் இருக்குமாம். ஏற்கனவே கண்ணான கண்ணே இன்னும் சாதனை படைத்து வருகிறது. இது அதையும் மிஞ்சுமாம்.

இந்நிலையில் போனி கபூர் கொரோனா பிரச்சனை முடியும்வரை எந்த ஷூட்டிங் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் வலிமை இப்பொழுது ஆரம்பிக்க போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.

வலிமை படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் கண்டிப்பாக தல பிறந்தநாளுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு வரை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்புதான் தல பிறந்தநாளுக்காண ‘Common DP’ வெளியிட்டு சமூக வலைதளத்தை புரட்டிப் போட்டனர் அஜித் ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top