வலிமை பார்த்துவிட்டு முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்.. தெறிக்க விடப் போவது உறுதி

கொரோனா பிரச்சினையின் காரணமாக வெளியீடு தள்ளிப் போயிருந்த வலிமை படம் தற்போது வெளியாக இருக்கிறது. இதற்காக பல வருடங்களாக காத்திருந்த அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை படத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

வரும் பிப்ரவரி 24ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் இந்த திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது வலிமை திரைப்படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் குறிப்பிட்ட சில முக்கிய நபர்களுக்கு ஜீ ஸ்டுடியோவில் காட்டப்பட்டுள்ளது. அந்த குழுவில் இருந்த முக்கிய நபரான ராஜேஷ் வசானி தற்போது வலிமை திரைப்படத்தைப் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, வலிமை திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை மிரள வைத்துள்ளது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி ஹாலிவுட் லெவலுக்கு நம்மை பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. மேலும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் அஜித்தின் நடிப்பும் மிரட்டலாக உள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்த பல திரைப்படங்களை விடவும் வலிமை திரைப்படம் பல விறுவிறுப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிளைமாக்ஸ் காட்சி நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கும் படி இருக்கிறது என்று அவர் வலிமை படக்குழுவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ajith-valimai
ajith-valimai

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மற்றும் வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவில் அஜித் செய்த பல சாகச காட்சிகளும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பே இவ்வளவு பாசிட்டிவ் கமெண்டுகள் வருவதால் தற்போது அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் வரும் பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை தெறிக்க விடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.