Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை கதையில் ஏற்பட்ட குழப்பம்.. அடப் போங்கய்யா! என டென்ஷனில் வினோத்
தல அஜித், வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. போனி கபூர் என்ற படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
வலிமை படத்தில் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்தின் எந்த ஒரு வேலையையும் தொடங்க வேண்டாம் என தல அஜித் கூறியதால் வலிமை படம் எப்போது வெளிவரும் என்பதே தெரியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அனேகமாக 2021 தீபாவளிக்கு தான் வெளி வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மேலும் மீதி உள்ள படப்பிடிப்பை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்க இருக்கிறார்களாம். தல அஜித் உத்தரவின்படி, கொரானா தாக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு தான் அல்லது அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி வலிமை படம் செல்லும்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு போர்சன்களை டெல்லியில் எடுக்க முடிவு செய்து அதற்கான லொகேஷன்களை தேடி உள்ளார். ஆனால் எதுவுமே படத்திற்கு செட் ஆகும் படி இல்லையாம். கண்டிப்பாக அந்த காட்சிகளை வெளிநாட்டில் எடுத்தாக வேண்டிய சூழல்.
தற்போது வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்த முடியாத காரணத்தினால் என்ன செய்வது என்றே தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் வினோத். ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் கூட பார்க்க முடியாமல் தவிக்கும் தல அஜித் ரசிகர்களுக்கு இது மேலும் சோகத்தை கொடுத்துள்ளது.
