Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தாங்க வலிமை பர்ஸ்ட் லுக் அப்டேட்.. தல ரசிகர்களுக்கு கெத்தான அறிவிப்பு
தளபதியின் பீஸ்ட் பர்ஸ்ட் லுக் ரிலீசாகி பட்டையை கிளப்பும் அதே வேளையில் தல ரசிகர்களுக்காக வலிமை படக்குழு ஒரு சிறப்பான செயலை செய்துள்ளது.
தல அஜித் கதாநாகயகனாக வினோத் இயக்கும் படம் வலிமை இந்த தினரப்படம் தொடர்பாக ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என ஏங்கித்தவிக்கும் தல ரசகர்களுக்காக படக்குழு ஒரு செய்தி கொடுத்துள்ளது.
தல ரசிகர்கள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் “வானதி சீனிவாசன்” இந்திய கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளர் “அஸ்வின்” ஆகியோரிடம் வலிமை அப்டேட் கேட்ட காணொளி டிரண்டிங் ஆனதை தொடர்ந்து இனி இவர்களை காக்க வைக்க வேண்டாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது.
போனி கபூர் இந்த மாத இறுதியில் சென்னை வருகிறாராம். அதன்படி வருகிற ஜூலை முதல் வாரத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிட இருப்பதாக ஒரு தகவல் தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஆக ஒரு பத்து நாளில் ஒரு சிறப்பான சம்பவம் இருக்கு.

valimai-latest-update
இந்த வலிமை பட செய்திக்கான செயலே இவ்வளவு எதிர்பார்ப்பு எனில் தல தரிசனத்திற்கான செயல் எவ்வளவோ. கோடிக்கணக்கில் காத்திருக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தல ரசிகர்களின் கொண்டாட்டம் எப்போதும் வெறித்தனமே.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
