Connect with us
Cinemapettai

Cinemapettai

வலிமை படத்திலிருந்து லீக்கான புகைப்படம்.. இளமை துள்ள க்யூட்டாக இருக்கும் தல

ajith-valimai-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை படத்திலிருந்து லீக்கான புகைப்படம்.. இளமை துள்ள க்யூட்டாக இருக்கும் தல

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் ஓய்ந்து போய் விட்டனர். இருந்தாலும் தயாரிப்பு தரப்பு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

வேறு வழியே இல்லாமல் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து திருட்டுத்தனமாக வெளியாகும் லீக்கான புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித் இளமை கெட்டப்பில் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் வலிமை பட போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

valimai-leaked-photo

valimai-leaked-photo

வலிமை படத்திலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. பசியில் காத்திருந்தவனுக்கு பிரியாணி கிடைத்ததை போல லீக் ஆன இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் வலிமை திருவிழா ஆரம்பம் எனவும் ஹேஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். கிடைக்கும் சின்ன சின்ன வலிமை விஷயங்களை வெறித்தனமாக கொண்டாடும் தல ரசிகர்கள் கண்டிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வேற லெவலில் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

விரைவில் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வருகிற ஏப்ரல் அல்லது தல அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை பட ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top