Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை: அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகும் அஜீத்? பதறிப்போய் போன் போட்ட போனி கபூருக்கு தல கூறிய பதில்!
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்காலிகமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகளை முடுக்கி விடப்பட்டுள்ளன என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஆனால் தல அஜித், கொரோனா நோய்க்கு மருந்து கண்டு பிடித்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார். சுயநலத்திற்காக படத்தில் நடித்து மற்றவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டால் நன்றாக இருக்காது என ஓப்பனாக கூறி விட்டாராம்.
இதற்கிடையில் தல அஜீத்துக்கு கதை சொல்ல பல இயக்குனர்கள் அவரது வீட்டுக்கு போன் பண்ணியா செய்திகள் அரசல் புரசலாக கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதனை அறிந்த போனிகபூர் உடனடியாக தல அஜீத்துக்கு ஃபோன் பண்ணி, நீங்கதானே படப்பிடிப்பு இப்போதைக்கு வேண்டாம் என சொன்னீங்க, ஆனா தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்தி வந்து கொண்டு இருக்கே என கேட்டுள்ளார்.
அதற்கு தல அஜித், வலிமை படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆக மாட்டேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டாராம். மேலும் வலிமை தான் அடுத்து என்னுடைய படமாக தியேட்டரில் வெளிவரும் என்பதையும் உறுதியாக கூறி விட்டாராம்.
இதனால் நிம்மதி அடைந்த போனிகபூர் தனக்கு தவறான செய்திகள் கொடுத்து அவர்களை கண்டித்து விட்டாராம்.
