ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வலிமை. பலமுறை பட ரிலீஸ் தள்ளிப் போனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து இருந்தது. இன்று அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
வலிமை படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் நேர்மையான கருத்துக்கள் வந்தாலும் சில எதிர்மறையான கருத்துகளும் வருகிறது. வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் ஹெச் வினோத் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கூறிக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் வால்டர் வெற்றிவேல் படத்தின் அட்ட காப்பிதான் வலிமை படம் என கூறியுள்ளார். பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல் வலிமை படத்தில் அஜித்தும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
வால்டர் வெற்றிவேல் படத்தில் தம்பி அப்பாவி போல் நடித்து வில்லனாக இருப்பார். அதேபோல் வலிமை படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் சண்டைக் காட்சிகள் மட்டும்தான் வேறுவிதமாக உள்ளது. வலிமை படத்தில் அதிக ஸ்டன்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் வால்டர் வெற்றிவேல் படத்தை இப்ப உள்ள ட்ரெண்டை போல் எடுத்துள்ளார் ஹெச் வினோத் என பயில்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு வலிமை படத்தைப் பற்றி பயில்வான் விமர்சிப்பதால் அவர் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்து உள்ளார்கள். ஆனால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படம் ஏமாற்றத்தை அளித்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.