தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் உருவாகி வருகிறது. ஆனால் தற்போது வரை வலிமை படத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை.
கடந்த சில மாதங்களாக தல அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று போகிற இடங்களிலெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு டார்ச்சல் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என தல அஜித் தன் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதைவிட படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மற்ற மொழிகளில் தயாரிக்கும் படங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இதுவே ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தான் இருந்தது. இதன் காரணமாக அடிக்கடி சமூக வலைதளங்களில் நேரடியாக போனி கபூரிடம் சண்டைக்கு சென்றனர் என்பது தெரிந்த விஷயம் தான்.
இப்படியே போனால் மொத்த குடும்பத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள் என கனித்த போனி கபூர் ஒரு வழியாக தற்போது அதிகாரப்பூர்வமாக வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டார்.

மே 1ம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமைப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளார்களாம். இந்த தகவல் ஏற்கனவே பலமுறை சமூக வலைதளங்களில் உலா வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.