ஒரு வழியாக வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. தல அஜித் காட்டில் இனி அடைமழை தான்!

நீண்ட நாட்களாக வலிமை படப்பிடிப்பு நடைபெறாமல் தடுமாறி வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டதாக தல ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் ஆரம்பித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு தல தரிசனம் கிடைத்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும் வலிமை படக்குழுவினர் இன்னமும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருகின்றனர்.

சமீபத்தில் தல அஜித் முதலில் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கலாம் என தெரிவித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை தொடங்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்.

முதலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் மீதமுள்ள வெளிநாட்டு படப்பிடிப்புகளை மொத்தமும் முடித்து விட்டு வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

valimai-cinemapettai
valimai-cinemapettai

விஜய் ரசிகர்கள் மாஸ்டர் மற்றும் தளபதி 65 போன்ற படங்களை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித் ரசிகர்கள் தங்களுடைய வலிமை படத்தைக் கொண்டாட ஒரு வழி இல்லையா எனும் அளவுக்கு ஏங்கிக் கிடக்கின்றனர்.

தல அஜித் ரசிகர்கள் இருக்கும் வெறியை பார்த்தால் கண்டிப்பாக பேய் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. தல டக்கரு டோய்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்