Connect with us

டென்ட் படத்தில் வலிமை கனெக்ஷன்- போட்டோவை வைரலாக்கி இணையத்தை கலக்கும் தல ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டென்ட் படத்தில் வலிமை கனெக்ஷன்- போட்டோவை வைரலாக்கி இணையத்தை கலக்கும் தல ரசிகர்கள்!

மொமெண்டோ, பிரெஸ்டிஜ், இன்செப்ஷன், இன்டஸ்டெல்லர் என அறிவியல் விஷயங்களை படங்களில் மிரட்டும் விதமாக காமிப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகின்றனர். என்ன தான் டெக்னலால்ஜி வந்தாலும் இவரின் செல்லுலாய்டு பிலிம் மேக்கிங் வேற லெவல் தான்.

TENET – டென்ட் – இவர் இயக்கத்தில் வெளியான புதிய படம். முன்பே உலகில் பல இடங்களில் ரிலீஸ் ஆனது. கடந்த நான்காம் தேதி இப்படம் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சங்களே கிடைத்துள்ளது.

இப்படத்தின் கதைப்படி 7 நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. அதில் இந்தியாவில் மும்பையில் நடப்பது போன்ற கதைக்களம். பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய ரோலில் நடித்திருப்பார். அந்த பகுதி ஷூட் சமயத்தில் வலிமை படத்தின் கேமராமேன் நீரவ் ஷா, அசிஸ்டெண்ட் கேமரா ஆப்ரேட்டராக பணியாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதை கண்டுபிடித்த அஜித் ரசிகர்கள் அந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

nirav sha

‘பில்லா’ படத்தில் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காமித்தவர் நீரவ் ஷா. அஜித்தின் பைக் வீலிங் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் இந்த விஷயத்தை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சர்வதேச படத்தில் பணி புரிந்த கேமராமேன் என கொண்டாடி வருகின்றனர். ‘வலிமை’ குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகாதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த தகவல் கிடைத்துள்ளது.

tenet end credits

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top