Tamil Cinema News | சினிமா செய்திகள்
12 வருடம் கழித்து மீண்டும் அஜித்துடன்.. வலிமை பட வில்லன் இவர் தானுங்க
தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிறகு போலீஸ் அதிகாரியாக களமிறங்கியிருக்கும் தல அஜித் எடையை குறைத்து கட்டுமஸ்தான உடலுடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் வலிமை படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் சென்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கிசு கிசுகின்றனர் கோலிவுட்டில். வரும் வாரத்தில் இருந்து படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நவ்தீப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் பிரசன்னா அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தது நம்மில் பலருக்கு தெரியும்.

Navdeep-Pallapolu
தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர். இன்று தெலுங்கு சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருப்பவர். அதுமட்டுமன்றி ஜீவாவின் சீறு படத்திலும் நடித்திருந்தார்.

navdeep
இவர் 2008 இல் ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். தற்பொழுது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடி ஆகிவிட்டார்.
