தனது ரசிகர்களால் செல்லமாக “தி டாக்டர்” என்று அழைக்கப்படும் ரேஸிங் ஜாம்பவான் வாலென்டினோ ரோஸ்ஸி இத்தாலியில், தன்னுடைய விர்46 அகாடமியில் பயிற்சியில் ஈடு பட்டிருந்தார்.

அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் 38 வயதான ரோஸ்ஸியின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது . பின்பு நேற்று இரவே அவருக்கு சர்ஜெரி செய்து மெட்டல் பின் பொருத்தப்பட்டது.

இன்று இவரை பரிசோதனை செய்த மருத்துவர் இவரை டிஸ்சார்ஜ் செய்தார். 30-40 நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரீமியர் பிரிவில் தன்னுடைய 300 வது போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்படத்தக்கது.

ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர்; விரைவில் குணம் அடைந்து ரேஸ் களத்தில் பங்கேற்க தயார் ஆக வேண்டும் என்று இவரின் ரசிகர்கள் ஆவலோடு உள்ளார்கள்.